கொல்லிகள் மேலாண்மை
  
Translated

கொல்லிகளின் மேலாண்மை — கொல்லிகளின் தகுந்த பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஒருங்கிணைந்தச் செயல்கள். இந்த மேலாண்மையின் முக்கியமான நோக்கங்கள்: (அ) நோயாளியின் குணமடைதலை மேம்படுத்தல், (ஆ) கொல்லிகளை எதிர்க்கும் வாய்ப்புகளைக் குறைத்தல், (இ) பெருங்கிருமிகளின் பரவலைக் குறைத்தல்.[1]


பெருங்கிருமி (சூப்பர்பக்) — பொதுவாகப் பயன்படுதத்தும் பெரும்பான்மை கொல்லிகளுக்கு எதிர்ப்பு சக்தி அடைந்த நுண்ணுயிரினங்களுக்குப் பெயர் பெருங்கிருமி.

 

“மருத்துவமனைகளிலும் சமுதாயத்திலும் கொல்லிகளின் மேலாண்மையைச் செயல்படுத்தினால் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும்."

 

"கொல்லிகளின் மேலாண்மை திட்டங்களை மருத்துவமனைகளுக்கும், மருந்தகங்களுக்கும் சமுதாயத்திற்கும் சிபாரிசு செய்யப்பட வேண்டும்”

 

Learning point

கொல்லிகளின் மேலாண்மையை எப்படி செயல் முறைக்குக் கொண்டுவருவது?

 

கொல்லிகளை அளவுக்கு அதிகமாகவும் தவறாகவும் பயன்படுத்துவத்தைக் குறைப்பதே கொல்லிகளின் மேலாண்மை நோக்கங்களில் ஒன்றாகும்.  கொல்லிகள் நீண்ட காலத்திற்குப் பயன்பாட்டில் இருக்க வேண்டுமானால் அவற்றை   முறையாக பயன்படுத்த வேண்டும். இதனால், மருந்துக்குக் கட்டுப்படாத நுண்கிருமிப்பிணிகளைக் குறைக்கலாம். கொல்லிகள் உட்கொள்வதால் நோயாளிகளுக்கு வரும் பக்க விளைவுகளைத் தவிர்க்க உதவலாம். மருத்துவமனைகளும் சுகாதார நிறுவனங்களும் நுண்ணுயிர்ப்பிணிகளையும் தீநுண்மப்பிணிகளையும் உறுதி செய்து தகுந்த முறையில் சிகிச்சை செய்வதற்கான வழிகாட்டுகளை உருவாக்கியுள்ளன.

 

கொல்லிகளின் மேலாண்மை பொறுப்பு, சுகாதார வழங்குநர்களுக்கு மட்டுமல்ல, அதில் பொது மக்களுக்கும் ஒரு முக்கிய பங்கு உண்டு.  கொல்லிகளைத் தகுந்த முறையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க நீங்களும் உதவலாம்.[2] இதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டியவை:

 

- உங்கள் நோய்க்கான காரணம் அல்லது சாத்தியமான காரணங்களைப் புரிந்து கொண்டு, கொல்லிகள் தேவையில்லை என்றால் உங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டாம்.

- நல்ல தூய்மை நலவியல் முறைகளைப் பின்பற்றி அசுத்தமான உணவையும் தண்ணீரையும் தவிர்க்க வேண்டும்.

- நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளைப் பெற்றுள்ளீர்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

- மருத்துவர்களின் பரிந்துரைகளைப் பின்பற்றி, கொல்லிகளைத் தகுந்த முறையில்   உட்கொள்ள வேண்டும்.

- மீதமுள்ள கொல்லிகளை உட்கொள்ளவோ ​​அல்லது மற்றவர்களிடமிருந்துப் பெறவோக் ​​கூடாது

 

ஆதார நூற்பட்டியல்

[1]     நுண்கிருமிப்பிணி நோயியல் நிபுணர்கள் சங்கம்.  கொல்லிகள் மேலாண்மை. இவ்வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Association for Professionals in Infection and Epidemiology. Antimicrobial stewardship. Retrieved from

https://apic.org/professional-practice/practiceresources/antimicrobial-stewardship/

[2]     மாயோ கிளினிக். (2018, ஜனவரி 18). கொல்லிகள்: நீங்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்துகிறீர்களா? இவ்வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

Mayo Clinic. (2018, January 18). Antibiotics: Are you misusing them? Retrieved from https://www.mayoclinic.org/healthylifestyle/consumer-health/in-depth/antibiotics/art-20045720

Related words.
Word of the month
New word